ஸ்காபரோ வெஸ்ட்ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் படுகாயம்
In கனடா May 6, 2019 4:54 pm GMT 0 Comments 2527 by : Jeyachandran Vithushan

ஸ்காபரோ வெஸ்ட்ஹில் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிங்ஸ்டன் வீதி மற்றும் காசில் ட்ரைவ் பகுதியில் நேற்று அதிகாலை 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த அந்தநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை ரொறன்ரோ அவசர மருத்துவப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அங்கிருந்து வெற்றுத் தோட்டாக்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.