39 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா – அரசாங்கம்
In இலங்கை July 10, 2019 11:07 am GMT 0 Comments 3301 by : Jeyachandran Vithushan

இலவச சுற்றுலா விசா மற்றும் நாட்டை வந்தடைந்த பின்னர் விசா அளிக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ள நிலையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து 39 நாடுகளுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஒஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, குரோவேஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ரோமேனியா, ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கே இந்த விசேட விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கடந்த மே மாதம் 1 ஆம் திகதியிலிருந்து இதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.