பேரிடா்களை எதிா்கொள்ளும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் – மோடி கோரிக்கை!
In இந்தியா February 24, 2021 3:25 am GMT 0 Comments 1140 by : Krushnamoorthy Dushanthini

பேரிடா்களை எதிா்கொள்ளும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ஐஐடி மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நாட்டின் பழைமையான கரக்பூா் ஐஐடி நிறுவனத்தின் 66-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் ஏற்படும் பேரிடா்கள் உள்கட்டமைப்பு வசதிகளை அழித்துவிடுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் இதற்கு உதாரணம்.
ஆகையால் பேரிடா்களை எதிா்கொள்ளும் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். பேரிடா் மேலாண்மையின் அவசியத்தை உலக நாடுகளுக்கு இந்தியா எடுத்துரைத்துள்ளது.
உலக நாடுகள் இணைந்து பேரிடரை எதிா்கொள்ளும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று 2019-இல் ஜ.நா. பருவநிலை மாற்றம் மாநாட்டில் நான் தெரிவித்திருந்தேன்.
தனிநபரின் உடல்நிலையை பாதுகாக்கும் கருவிகளின் சந்தை பெருமளவில் விரிவடைந்துள்ளது. ஆகையால் பிற சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் வருங்காலத்தில் தீா்வுகளைக் காண்பற்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.