அழிந்து போன நகரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடை கண்டுபிடிப்பு!

இத்தாலியிலுள்ள புராதான நகரமான பொம்பேயியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட குறித்த கடையில் முழுமையான அளவில் பானைகளும், சில உணவுப் பொருட்களின் தடயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடையின் முன்புறம் சேவல் மற்றும் வாத்து உருவங்கள் இடம் பெற்றுள்ளதால் இது இறைச்சிக் கடையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்தநிலையில் இது ஒரு அசாதாரண கண்டுபிடிப்பு என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கி.பி. 79ல் எரிமலைச் சீற்றத்தினால் அழிந்து போன பொம்பேயி நகரத்தில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.