இந்த வாரம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள் இதோ!

ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் மூன்று தமிழ் சினிமாக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி ஐந்து திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
‘கண்ணே கலைமானே’ இத்திரைப்படம் இயக்குனர் சீனுராமசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் நல்ல ஹிட்டாகியுள்ளதால் இத்திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ‘எந்தன் கண்களை காணோம்’ என்ற பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது.
இதேபோன்று ‘LKG திரைப்படம் ஆர்.ஜே. பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் அனைத்து அரசியல் கட்சிகளையும் கிண்டல் செய்துள்ளதால் இத்திரைப்படத்திற்கு இதுவரை எந்த அரசியல்வாதிகளிடம் இருந்தும் எதிர்ப்பு வரவில்லை.
’90ml’ திரைப்படம் பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகை ஓவியா நடித்துள்ள த்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய இத்திரைப்படம் இளைஞர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று, ‘To Let’ திரைப்படம் வெளியீட்டுக்ககு முன்னரே தேசிய விருது பெற்ற இத்திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. இயக்குனர் செழியனின் படைப்பில் உருவாகியுள்ளது.
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகிய ‘பெட்டிக்கடை’ திரைப்படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.