பிரித்தானிய கப்பலை கடத்தும் ஈரானின் முயற்சி தோல்வி!
In இங்கிலாந்து July 11, 2019 5:50 am GMT 0 Comments 2846 by : Benitlas

பிரித்தானிய எண்ணெய்க் கப்பல் ஒன்றினைச் சிறைபிடிக்கும் ஈரானின் முயற்சி தோல்வியடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரித்தானிய எண்ணெய்க் கப்பலொன்றை ஹோர்மூஸ் நீரிணையில் வைத்து இடைமறிக்க ஈரானிய படையினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இவ்வாறு தோல்வியடைந்தது.
பிரித்தானியக் கடற்படையினரின் HMS Montrose என்ற போர்க்கப்பலின் உதவியுடன், ஈரானிய படையினருக்குச் சொந்தமான படகுகள் விரட்டியடிக்கப்பட்டதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பிரித்தானிய எண்ணெய்க் கப்பலை ஈரானிய நீர்ப்பரப்புக்கு அருகிலேயே நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
எனினும் பிரித்தானியாவின் சிறியரக போர்க்கப்பலொன்றின் எச்சரிக்கையை அடுத்து ஈரானிய படையினரின் படகுகள் பின்வாங்கியுள்ளன.
கடந்த வாரம் ஜிப்ரால்டர் கடற்பிராந்தியத்தில் பிரித்தானிய கடற்படையினரால் ஈரானிலிருந்து புறப்பட்ட எண்ணெய்க் கப்பலொன்று கைப்பற்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்திருந்த நிலையில் குறித்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளுக்கு நாள் ஈரானுக்கும், பிரித்தானியாவிற்கும் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்து வருகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.