News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: தொழிற்கட்சி
  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்?
  • காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
  • சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!
  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  1. முகப்பு
  2. ஆசிரியர் தெரிவு
  3. பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் யார்? வேறு திசையில் செல்லும் நிசாம்தீன் வழக்கு!

பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் யார்? வேறு திசையில் செல்லும் நிசாம்தீன் வழக்கு!

In ஆசிரியர் தெரிவு     October 21, 2018 4:14 am GMT     0 Comments     1407     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவுஸ்ரேலிய பொலிஸார் மீளப்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஷமன் கவாயாவின் சகோதரருக்கும் தொடர்பு இருப்பதாக நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் அவரது வீடு கடந்த வாரம் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது என டெய்லி டெலிகிராப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த இலங்கை மாணவர் நிசாம்தீனின் பணியிட அலுவலகத்தின் மேசையில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பேட்டில், முக்கிய இடங்களில் தாக்குதல்கள் மேற்கொள்வது உட்பட அரசியல் புள்ளிகளை படுகொலை செய்வதற்கும் திட்டமிடப்பட்ட தகவல்கள் எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் நிசாம்தீன் கைது செய்யப்பட்டு சிட்னி Goulburn பகுதியில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு சிறையில் ஒரு மாத காலம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆனால், கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் புத்தகத்திலுள்ள தகவல்கள் எதுவுமே நிசாம்தீனின் கையெழுத்தில் அமைந்தவை அல்ல என்பதை நிசாம்தீனும் அவரது தரப்பு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் எடுத்துக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் திருப்பப் பெற்றுக்கொண்டனர். இருப்பினும் அதற்கு முன்னரே நிசாம்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அப்படியெனில் பிரச்சினைக்குரிய தகவல்கள் அடங்கிய அந்த குறிப்பேட்டில் உள்ள அந்த கையெழுத்துக்கு சொந்தமானவர் யார் என்பதை கண்டறிவதில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரமப்பித்ததுடன் பயங்கரவாத தாக்குதல் சூத்திரதாரியை கண்டுபிடித்து கைது செய்வதற்கு சகல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணைகளின் பிரகாரம், கிரிக்கெட் அணி வீரர் உஷமன் கவாயாவின் மூத்த சகோதரன் அர்சலன் கவாஜா பெற்றோருடன் தங்கியிருந்த Westmead வீட்டில் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கடந்த வாரம் தேடுதல் நடத்தப்பட்டது.

இருப்பினும் இந்த தேடுதலின்போது அர்சலன் கவாஜா கைது செய்யப்படவோ அல்லது எவ்வித குற்றச்சாட்டுகளோ பதிவுசெய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் வீரர் உஷமன் கவாயாவின் மூத்த சகோதரனான அர்சலன் கவாஜா நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆஸி.!  

    அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 516 என்ற வெற்றி இலக்கு நிர்ணயி

  • இலங்கை மாணவனை சிக்கவைத்த கிரிக்கெட் வீரரின் சகோதரர் மீண்டும் கைது  

    அவுஸ்ரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலன் கவாஜா சிட்னி பொலிஸாரால்

  • இலங்கை மாணவனை சிக்க வைத்த கிரிக்கெட் வீரரின் சகோதரர் கைது  

    போலியான குற்றச்சாட்டுக்களை இலங்கை மாணவன் மீது முன்வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்ரேலிய கி

  • நான் குற்றமற்றவன் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது – நிஸாம்தீன்  

    தாம் குற்றமற்றவன் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விச

  • ஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்!  

    அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் ஒரே நாளில் 300,000 இற்கும் அதிகமான ம


#Tags

  • Arsalan Khawaja
  • New South Wales
  • Nizamdeen
  • usman khawaja
    பிந்திய செய்திகள்
  • பிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: தொழிற்கட்சி
    பிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: தொழிற்கட்சி
  • காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
    காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
    காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  • தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
    புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
    போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
  • கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேகா
    கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேகா
  • மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
    மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
  • அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
    அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.