Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாளை மட்டக்களப்பில் ‘வேல்ஸ் விருதுகள் 2015’

In
Updated: 06:59 GMT, Nov 20, 2015 | Published: 06:59 GMT, Nov 20, 2015 |
0 Comments
1631
This post was written by : Varothayan

இலங்கை திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் வேல்ஸ் சினிமா பட்டறை, வருடம் தோறும் சிறந்த திரைத்துறைப் படைப்பாளிகளை இனம் கண்டு விருது வழங்கி வருகின்றது.

அந்த வகையில் ‘வேல்ஸ் விருதுகள் 2015’ இம்முறை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நாளை (21) மாலை 5 மணிக்கு மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.

வேல்ஸ் சினிமா பட்டறையின் இலங்கை இயக்குனர் எஸ்.கிருஷ்ணா அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வுக்கு வேல்ஸ் சினிமா பட்டறையின் நிறுவுனர் வேல் மற்றும் தென் இந்திய சினிமா இயக்குனர் சுரேஷ் கலந்து கொள்வதோடு மூத்த சொல்லிசை கலைஞன் கிரிஷான் மகேசன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இலங்கையில் திரைத்துறை சார்ந்து பல விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டு கலைஞர்களை ஊக்குவித்து வரும் அதே சமயத்தில் வேல்ஸ் விருதுகள் அனைவரின் மத்தியிலும் தனிச் சிறப்போடு பார்க்கப்படுகிறது.

நடுநிலமையான தெரிவுகள், படைப்புகளுக்கான விமர்சனங்கள் வழங்குவதற்கு துறை சார்ந்த அனுபவசாலிகள் நியமிக்கப்படுதல் போன்றன வேல்ஸ் விருதினை மிகப்பெரிய கௌரவமாக கலைஞர்கள் கொண்டாடுவதற்கு காரணமாகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg