Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முடி கொட்டுவதற்கு தீர்வு தரும் வெங்காயம்!

In
Updated: 07:49 GMT, Mar 8, 2016 | Published: 07:47 GMT, Mar 8, 2016 |
0 Comments
1336
This post was written by : Anojkiyan

வெங்காயம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி தலைமுடி பிரச்சனைக்கும் தீர்வாக உள்ளது.

வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலை முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுகிறது.

எவ்வாறு பயன்படுத்தலாம்?

1. வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த சிகிச்சையை வாரம் 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

2. 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை 1 லிட்டர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து முடித்த பின், இறுதியில் அந்த கலவையைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.

இப்படி தலைக்கு குளிக்கும் போது செய்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். குறிப்பு: இந்த முறையை பின்பற்றினால் அடுத்த முறை தலைக்கு ஷாம்பு போடும் வரை தலையில் வெங்காயத்தின் வாசனை இருக்கும்.

3. 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து, அந்த எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை மட்டும் தான் பின்பற்ற வேண்டும்.

4. ஒரு சிறு வெங்காயத்தை அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஒலிவ் ஒயில் மற்றும் 1 கப் பீர் சேர்த்து கலந்து, தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும். இந்த மாஸ்க்கையும் வாரம் ஒருமுறை தான் மேற்கொள்ள வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg