Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையுடனான வர்த்தக உறவை அதிகரிக்க விரும்பும் பாகிஸ்தான்

In வணிகம்
Updated: 09:11 GMT, Mar 14, 2016 | Published: 09:09 GMT, Mar 14, 2016 |
0 Comments
1301
This post was written by :

தமது நாடு, இலங்கையுடனான வர்த்தக தொடர்புகளை அதிகரித்துக் கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இத்தகவலை அந்நாட்டு நிதி அமைச்சர் ஐசாக் தார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் அந்நாட்டிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஜயநாத் லொக்குகேவிற்கும், அந்நாட்டு நிதி அமைச்சர் ஐசாக் தாருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் தற்பொழுது சிறந்த வர்த்தக உறவு காணப்படுகின்றது. இரண்டு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவதன் மூலம் எமது வர்த்தக செயற்பாடுகளை மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும்.

இலங்கையுடனான வர்த்தக உறவை அதிகரித்துக்கொள்ள எமது நாடு மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றது. இதன் மூலம் இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg