Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதி மதிப்பு இரட்டிப்பாக வாய்ப்பு

In வணிகம்
Updated: 09:31 GMT, Mar 22, 2016 | Published: 09:24 GMT, Mar 22, 2016 |
0 Comments
1201
This post was written by : Risha

இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதி எதிர்வரும் 2018-19 நிதியாண்டில் 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை அதிகரிக்கும் என இந்திய வர்த்தக குழுமங்களின் தலைமையகமான அசோசெம் அமைப்பின் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இந்திய மருந்து துறை கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் சிக்கல்களை எதிர்நோக்கி வந்தது.

ஆனால் தற்போது மருந்து தொடர்பான ஆய்வுகள், உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் இந்திய நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் ஏற்றுமதி அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008-09 நிதியாண்டில் மருந்து ஏற்றுமதி 43 சதவீதமாக இருந்தது. இது 2013-14 நிதியாண்டில் 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேவேளை 2013-14ல் ஏற்றுமதி மதிப்பு 1.1 கோடி டொலராக காணப்பட்ட நிலையில், இந்த மதிப்பு சுமார் இரண்டு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg