Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பங்குனி உத்திர விரதம்

In ஆன்மீகம்
Updated: 10:21 GMT, Mar 23, 2016 | Published: 10:21 GMT, Mar 23, 2016 |
0 Comments
1243
This post was written by :

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பௌர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி, முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

இந்த விரதத்தை ஆண், பெண் என அனைவருமே அனுசரிக்கலாம். அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து முருகன் துதிப்பாடல்களை பாடலாம். அன்றைய தினம் முழுவதும் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் மேற்கொள்ளலாம்.

முடியுமாயின், பகல் வேளையில் ஏழை மக்;களுக்கு அன்னதானம் வழங்கலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர்கள் வளம் பெறுவார்கள். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்க வேண்டும்.

இந்த விரதம் இருந்துதான் தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும், மகாலட்சுமி மகா விஷ்ணுவையும் மணந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg