Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் வாகனப் பதிவு 50 வீதத்தினால் வீழ்ச்சி

In வணிகம்
Updated: 11:52 GMT, Mar 31, 2016 | Published: 11:52 GMT, Mar 31, 2016 |
0 Comments
1216
This post was written by :

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கை 50 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் 4,138 வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட போதும் இந்த வருடம் அந்த எண்ணிக்கை அரைவாசியாக குறைவடைந்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘2015 ஆம் ஆண்டு சுமார் 6,00,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 31,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகனங்களின் விலை மற்றும் வாகனங்கள் மீதான வரிகள் ஆகியன உயர்வடைந்தமையே இந்த பதிவு குறைந்தமைக்கான காரணம்’ ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg