Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

என்றும் இல்லாத அளவு வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை ரூபாய்

In வணிகம்
Updated: 12:14 GMT, Mar 31, 2016 | Published: 12:14 GMT, Mar 31, 2016 |
0 Comments
1224
This post was written by :

தற்பொழுது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 150 ரூபாவை எட்டியுள்ளது. அமெரிக்க டொலரின் பெருமதி இந்த தொகையை எட்டியுள்ளது இலங்கை வரலாற்றில் இதுவே முதற் தடவையாக இருக்கின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 149 ரூபாவாக இருந்தது. இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணயமாற்று விலையின் படி, ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 150.4 ரூபாவை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 150 ரூபா 54 சதமாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 164 ரூபா 36 சதமாகவும் விற்பனை பெறுமதி 170 ரூபா 90 சதமாகவும், சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 52 சதமாகவும், விற்பனை பெறுமதி 156 ரூபா 78 சதமாகவும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 34 சதமாகவும் விற்பனை பெறுமதி 115 ரூபா 97 சதமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg