Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குழந்தைகளின் மன அழுத்தத்திற்கான கரணங்கள்

In
Published: 04:49 GMT, Apr 9, 2016 |
0 Comments
1254
icon_com
This post was written by :
depression

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல உள்ளன. அவ்வாறான காரணங்களினால், தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர். சில குழந்தைகள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பார்கள். மேலும் சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தை கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். இன்னும் சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள்.

இவ்வாறு மன அழுத்தம் ஏற்படுவதற்கு கீழுள்ள விடயங்கள் முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

01.குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள் பெற்றோருக்கிடையான வாக்குவாதங்கள்.
02.பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைகளுக்கு உறவில் ஏற்படும் விரிசல்.
03.குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுதல் மற்றும் அவர்கள் விரும்பாத இயலாத விடயங்களை அவர்களின் மீது திணித்தல்.
04. நட்பில் உண்டாகும் மனவருத்தம்.
05.குடும்பங்கள் பிரிந்து விடுதல்.
05.மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு.
06.பெரிதாக ஏற்படும் இழப்புகள், அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள் படங்கள்.
07.அடிக்கடி ஏற்படும் உடல் நோய்கள் அல்லது தொற்று நோய்கள்.
08.குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்.
09.ஏனைய குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்.
10.பள்ளியில் அல்லது வெளி வட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்.
11.பெற்றோரை பாதிக்கும் மன உணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.
12.உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் விளைவுகள்.

இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மன அழுத்த நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுவர். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் போய் விடுவார்கள்.

இவ்வாறு குழந்தை ஒன்றுக்கு மன அழுத்தம் ஏற்படும்பொழுது, அவசரமாக வைத்தியர் ஒருவரை நாட வேண்டியது அவசியம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg