Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதுவருட காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கும் சம்பத் வங்கி

In வணிகம்
Updated: 11:38 GMT, Apr 13, 2016 | Published: 11:37 GMT, Apr 13, 2016 |
0 Comments
1143
icon_com
This post was written by : Anojkiyan
avurudu

தொலைநோக்குப் பார்வையுடன் கடந்த ஆண்டுகளில் வெற்றிகரமான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் சம்பத் வங்கி, தமது மதிப்பு மிக்கவாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த வெகுமதிகளையும், சலுகைகளையும், நன்மைகளையும் வழங்குவதன் மூலம் சிறந்த வாடிக்கையாளர் மைய நிறுவனமாக தொடர்ந்தும் தன்னை நிலை நிறுத்தியுள்ளது.

அந்த வகையில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சம்பத் வங்கி டபள் எஸ், ஹிட் சேமிப்பு, சன்ஹிந்த சேமிப்பு, லேடிஸ் ஃபர்ஸ்ட் பொது சேமிப்பு கணக்கு வைப்பாளர்கள், புபுது மற்றும் சப்பிரி சிறுவர் சேமிப்பு கணக்கு வைப்பாளர்களுக்கு 2016 ஏப்ரல் 4ஆம் திகதி முதல் விசேட பரிசுகளை வழங்கி வருகின்றது.

அந்த வகையில் பொது சேமிப்பு கணக்கில் ரூபா 100,000 வைப்பிலிடும் வாடிக்கையாளர்களுக்கு 12.5kg  லிட்ரோ எரிவாயு சிலிண்டரும் (எரிவாயு இல்லாமல்), ரூபா 75,000வைப்பிலிடும் வாடிக்கையாளர்களுக்கு 5kg லிட்ரோ எரிவாயு சிலிண்டரும் (எரிவாயு இல்லாமல்) பரிசாக வழங்கப்பட இருப்பதோடு, ரூபா 35,000வைப்பிலிடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரயாணப்பையும், ரூபா 15,000 வைப்பிலிடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குடையும் பரிசாக வழங்கப்படவுள்ளன.

அதேநேரம் புபுது மற்றும் சப்பிரி சிறுவர் சேமிப்பில் ரூபா 2,000வைப்புக்கு ஒரு பென்சில் பெட்டியும், ரூபா 5,000வைப்புக்கு ஒரு லூடோ விளையாட்டுப் பலகையும் பரிசாக வழங்கப்படவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg