Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாம்பின் விஷம் இரத்தத்தோடு சேர்கிறபோது நடப்பது என்ன – பிபிசியின் காட்சி விளக்கம்

In
Updated: 16:48 GMT, Apr 22, 2016 | Published: 16:46 GMT, Apr 22, 2016 |
0 Comments
1287
icon_com
This post was written by : S.K.Guna

உலகில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு  லட்சம் பேர் பாம்புக் கடியால் இறக்கிறார்கள் எங்கிறது ஒரு தகவல். இறப்பவர்களைத் தவிர அண்ணளவாக ஐந்து இலட்சம் பேர்வரை பாம்புக் கடியால் , பலத்த பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.விஷப்  பாம்பு உங்களைக் கடித்து, உங்கள் ரத்த நாளத்தில் விஷம் கலக்கும்போது என்ன நடக்கும் என்பதை செய்முறை மூலம்  BBC வெளியிட்டுள்ளது.

இவ்விவரணத்தின்  தொகுப்பாளரே தனது இரத்தத்தை கொடுத்து , அதில் விஷத்தை கலக்க வைத்திருக்கிறார். அவரிடமிருந்து எடுக்கப்பட்ட பத்து மில்லி கிராம்,இ ரத்தத்தில்  விஷம் கலக்கப்படுகிறது. கலக்கப்பட்ட  சிறிது நேரத்தில் இரத்தம் உறைய ஆரம்பிக்கிறது.

இரத்தம் உறைவது ஏன்?

இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை விஷம்முதலில்  தாக்குகிறது. அதுவே விரைவாக இரத்தம் உறையக் காரணியாகிறது. சிறிது நேரத்தில் இரத்தம் ஜெலி போலக் கட்டியாகிறது. இது இரத்த நாளங்களில் அடைப்பை  ஏற்படுத்தி, மாரடைப்பை ஏற்படுத்தி உயிரைப் பறிக்கிறது. அதைத் தவிர உடலினுள் ரத்தக் கசிவை அல்லது  மூளைக்கு அனுப்பப்படும் இரத்தத்தைச்  செல்லவிடாமமல் தடுத்து உயிரைப் பறிக்கிறது. சில குறித்த வகைப் பாம்புகளின் விஷமே இத்தாக்கத்தை ஏற்படுத்துவதாய் இருக்கிறது.

நரம்பு மண்டலத்தை  விஷம் எவ்வாறு தாக்குகிறது:

சில வகை பாம்புகளின் விஷமானது இரத்தத்தை உறையவைப்பதை விட, வேகமாக நாடி நரம்புகளைத் தாக்க வல்லதாயிருக்கிறது.  இதனால் இதயம் துடிப்பது சடுதியாக நிறுத்தப்படுகிறது அல்லது மூளை செயல் இழந்து பக்க வாதத்தை ஏற்படுத்தி  இறப்பை ஏற்படுத்துகிறது.

பீய்ச்சி அடிக்கப்படும் விஷம்:

சில வகையான பாம்புகள், கடிப்பதற்குப் பதிலாக தமது விஷத்தை எதிரி மீது பீய்ச்சியடிக்கிறது.  பொதுவாக கண்களை அல்லது வாயை குறிவைத்தே விஷம் பீய்ச்சியடிக்கப்படுகிறது.  இதனால், கண் பார்வை திடீரென மங்கலாகி பாதிக்கப்பட்டவர் ஒருவகையான அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். இதன் பாதிப்பால் அவருக்கு உயர்  இரத்த அழுத்தம் , மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது.

பொதுவாகப் பாம்பு கடித்தால் , அதன் விஷம் எமது ரத்தத்தில் கலந்து  செயற்படத்  தொடங்கச் சில நேரம் பிடிக்கும். ஆனால் தாக்குதலுக்கு இலக்கானவர் அதிர்ச்சி அடைவதால் பாதிப்புக்கள் விரைவாக நிகழ்கின்றன. அதிர்ச்சி அடைவதால்  இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பிப்பதால் விஷம் வேகமாக பரவுகிறது.  எனவே பாம்புக் கடி8க்கு இலக்கானால் பதற்றமடையாமல் இருப்பது  நல்லது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை சென்றால் வைத்தியரால் உங்களைக் காப்பாற்ற முடியும். அத்தோடு பல வெளிநாடுகளில் பாம்புக் கடிக்கான எதிர்வினை மருந்துகள் கிடைக்கின்றன. மருத்துவ வசதிகள் குறைந்த நாடுகளுக்கு  நீங்கள் விடுமுறைக்குச் செல்வதாக இருந்தால் அதனை வாங்கிக் கொண்டு செல்வது நல்லது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg