Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூந்தி லட்டு

In
Updated: 06:38 GMT, Apr 25, 2016 | Published: 06:37 GMT, Apr 25, 2016 |
0 Comments
1269
icon_com
This post was written by : Shailu
Laddu Boondi

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 2 கப்
சீனி – 3 கப்
தண்ணீர் – ஒன்றரை கப்
பொடித்த ஏலக்காய், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, ஃபுட் கலர் – சிறிதளவு
நெய் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

சர்க்கரையுடன் தண்ணீரை சேர்த்து பாகு காய்ச்சவும். கடலை மாவுவுடன் ஃபுட் கலர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் மாவை ஒரு பூந்தி கரண்டியில் கொட்டி, நேராக சூடான எண்ணெயின் மேல் கரண்டியை வைத்து, மற்றொரு கரண்டியால் பலமாக தட்டினால் முத்து முத்தாக விழும். இதை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

பின்னர் பொரித்து எடுத்த கடலைமாவை, உடனேயே சர்க்கரைப் பாகில் போட்டு, பாகிலிருந்து பூந்திகளை எடுத்து ஒரு தட்டில் கொட்டி, பொடித்த ஏலக்காய், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ ஆகியவற்றைக் கலந்து சிறிது நெய் விட்டு லட்டு பிடிக்கவும். சுவையான சத்தான பூந்தி லட்டு ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg