Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘போயிங்’கிடம் இருந்து 100 விமானங்களை கொள்வனவு செய்யும் ஈரான்

In வணிகம்
Updated: 09:56 GMT, Jun 20, 2016 | Published: 09:49 GMT, Jun 20, 2016 |
0 Comments
1203
icon_com
This post was written by :
Boeing

உலகின் பிரபல ஜெட் விமான தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடம் இருந்து 100 ஜெட்லைனர்ஸ் விமானங்களை ஈரான் கொள்வனவு செய்யவுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் தற்பொழுது செய்துகொள்ளப்பட்டுள்ளது.

தற்போது ஈரானில் உள்ள 250 பயணிகள் விமானத்தில் 230 விமானங்களை மாற்ற வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 100 ஜெட்லைனர்ஸ் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் விற்பனைக்கு அமெரிக்க கருவூலத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். எனவே குறித்த விமானங்களை போயிங் நிறுவனம் மிக விரைவில் ஈரானுக்கு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் அணு தயாரிப்பு குறித்து அந்நாட்டுடன் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் உடன்பாட்டை ஏற்படுத்தியதன் பின்னர், ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பொருளாதாரத்தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் ஈரான் பல உலக நாடுகளுடனான தனது பொருளாதார நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg