Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பன்னீர் 65

In
Updated: 15:32 GMT, Jun 24, 2016 | Published: 15:31 GMT, Jun 24, 2016 |
0 Comments
1196
icon_com
This post was written by : Anojkiyan
paneer-65-20-1466423615

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

மாவிற்கு…

மைதா – 1 1/2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் பன்னீரை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் ‘மாவிற்கு’ கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த மாவில் பன்னீர் துண்டுகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், பன்னீர் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் 65 ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg