Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாசு வெளியேற்ற ஊழல் : அமெரிக்காவிற்கு 15 பில்லியன் டொலர் வழங்கும் வொக்ஸ்வேகன்

In வணிகம்
Updated: 11:28 GMT, Jun 28, 2016 | Published: 11:28 GMT, Jun 28, 2016 |
0 Comments
1104
icon_com
This post was written by : Shailu
Volkswagen

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான வொக்ஸ்வேகன், தான் செய்த மாசு வெளியேற்ற ஊழலுக்காக அமெரிக்கா நாட்டுக்கு சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இதற்கான உடன்பட்டை வொக்ஸ்வேகன் அண்மையில் வெளியிட்டிருந்தது.

குறித்த தொகையில், பாதிப்புக்கு உள்ளான வாகனங்களின் சேதங்களை நீக்குவது அல்லது சுமார் 50 லட்சம் உரிமையாளர்களிடம் இருந்து கார்களைத் திரும்ப வாங்குவது, அவ்வுரிமையாளர்களுக்கு 10ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை இழப்பீடு வழங்குவது போன்ற செயற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

அதேபோன்று, மாசுபடுத்தும் வாகனங்கள் ஏற்படுத்துகிற சுற்றுச்சூழல் மாசுபாட்டை சரிசெய்ய தேவையானத் திட்டங்களுக்கு நிதி வழங்கவும், மாசுபடுத்தாத தொழில்நுட்பங்களை கண்டறிய ஆராய்ச்சி மேற்கொள்ளவும் குறைந்தது ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் குறித்த தொகையானது அமெரிக்க வரலாற்றிலேயே பிரச்சினை ஒன்றின் தீர்வுக்காக அளிக்கப்படும் மிகப் பெரிய தொகையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg