Chrome Badge

வேல்ஸில் வெள்ளப்பெருக்கு : மக்கள் அவதி

In
Published: 08:34 GMT, Nov 22, 2016 |
0 Comments
1098
08-1

வேல்ஸில் தொடர்ந்து பெய்த அடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அதனால் ஏற்படும் தாக்கங்களை குறைத்துக் கொள்ள தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த அறிவிப்பை வேல்ஸில் உள்ள வேல்ஸ் இயற்கை வளங்கள் அமைச்சகம் (Natural Resources Wales) விடுத்துள்ளது. குளிர்காலத்தில் ஏற்பட்டுள்ள முதலாவது வெள்ளப்பெருக்கு இதுவென்பதால் மக்களின் நலன் கருதி தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வேல்ஸில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல பாதைகள் நீரில் மூழ்கியுள்ளது. அதனால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு பல மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் மும்முரம் பெற்றுள்ளதாக அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

08-2
08-3

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)