Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் நினைவுகூரப்பட்ட மாவீரர் நாள்

In
Published: 16:45 GMT, Nov 27, 2016 |
0 Comments
1865
This post was written by : S.K.Guna
london-10

இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி மடிந்த மாவீரர்களையும், விடுதலைப் பற்றாளர்களையும் பொதுமக்களையும் நினைவு கூர்ந்து இன்றையதினம் பிரித்தானியாவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஷ்ட்டிக்கப்பட்டன.

இன்றையதினம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC ) ஏற்பாட்டில் ஸ்ரட்பேர்ட் ஒலிம்பிக் திடலில் அமைக்கப்பட்ட பெரிய அளவிலான கூடாரத்தில் நடைபெற்றது. பிரித்தானிய நேரப்படி நண்பகல் 12 .37 க்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் நாள் அனுஷ்டிப்பு இடம்பெற்றது. ஈகைச்சுடரை விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ஜெயத்தின் தாயார் ஏற்றிவைத்தார்.

வடக்கு கிழக்கில் 1989 ஆம் ஆண்டில் இருந்து இந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்ற போதிலும் 2009 ஆண்டுக்குப் பின்னர் தாயகத்தில் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

எனினும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழுகின்ற நாடுகளில் மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்களில் ஈடுபட்டுவருவது வழமையாகும்.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC ) லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்திவந்த போதிலும் இவ்வாண்டு பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றாக திரண்டு இருக்கக்கூடிய ஸ்ரட்பேர்ட் ஒலிம்பிக் திடலில் நடத்தியமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் இன்று பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

இதேவேளை ஒக்ஸ்பேர்ட்  இல் (OXFORD ) அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையம் மாவீரர் நினைவு இல்ல திடலில் மற்றுமொரு மாவீரர் நாள் அனுஷ்டிப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு நினைவு கூரப்பட்டிருந்தது.
londan

london-11

london-12

london-2

london-3

london-4

london-7

london-8

london-9

london-1

maaavveerar-2

maaavveerar-7

maaavveerar-3

maaavveerar-5

maaavveerar-7

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg