Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உக்ரைன் விவகாரம் குறித்த திட்டவரைபு வெற்றியளிக்கவில்லை: செர்கெய் லவ்ரோவ்

In ஐரோப்பா
Updated: 11:07 GMT, Nov 30, 2016 | Published: 07:27 GMT, Nov 30, 2016 |
0 Comments
1262
This post was written by : Elakkiya

கிழக்கு உக்ரைனில் நீடித்த சமாதானத்தை பெறுவதற்கான ஒரு திட்டவரைபு ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனினும் பேச்சுவார்த்தைகள் முறிவடையவில்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நீடித்த சமாதானத்தை பெறும் நோக்கில் உக்ரைன், ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையில் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நான்குவழி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் செர்கெய் லவ்ரோவ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘உடன்படிக்கை தெளிவாக உள்ளது. இருந்த போதிலும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இதனால் வெளியுறவு அமைச்சர்களால் தீர்மானம் எட்டமுடிவில்லை.’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கிழக்கு உக்ரைனில் வரலாற்று, கலாசார மற்றும் பொருளாதார பிராந்தியமாகவுள்ள டொன்பாஸிற்கு ஆயுதம்தாங்கிய ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உக்ரைனின் பிரேரணையையும் லவ்ரோவ் பின்தள்ளியுள்ளார்.

கிழக்கு உக்ரைனில் உக்ரேனிய துருப்புக்கள் மற்றும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான திட்டவரைபை உருவாக்குவதற்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மேற்குறித்த நான்கு நாடுகளும் உடன்பட்டன.

எனினும் இதுவரை அதற்காக தீர்வுத் திட்டம் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg