Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த கடல் அட்டைகள் பறிமுதல்: வனத்துறையினர் மீது தாக்குதல்

In
Updated: 12:05 GMT, Jan 10, 2017 | Published: 07:05 GMT, Jan 10, 2017 |
0 Comments
1147

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த கடல் அட்டைகளை நேற்று (திங்கட்கிழமை) பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேதாளை கிராமத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மண்டபம் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மண்டபம் வனத்துறையினருக்கு இரகசியத்தகவல் கிடைத்தது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற  வனத்துறையினர், நாட்டு படகில் மறைத்து வைத்திருந்த சுமார் மூன்று இலட்சம் மதிப்பிலான 350 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அடடைகளையும், கடத்துவதற்கு பயன்படுத்திய நாட்டு படகையும் பறிமுதல் செய்ததோடு,  சம்பவத்தோடு தொடர்புடையவர்களையும் கைது செய்தனர்.

இதன்போது திடீரென சம்பவ இடத்திற்கு வந்த குழு ஒன்று, வனத்துறையினரையும் ஊழியர்களையும் தாக்கியதோடு கைது செய்யப்ப்ட்டவர்களை மீட்டுச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

அத்தோடு கடல்அட்டைகள் பதப்படுத்தும் இடங்களை பொலிஸார் சோதனை செய்ததில், கடல் அட்டைகளை பதப்படுத்த பயன்படுத்தபட்டு வரும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையில், அல்லாபிச்சை அன்வர் சகுபர்சாதிக் ஜின்னா, உமர்அலி உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு அவர்கள்மீது, ஆறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்து செய்துள்ளனர்.