Chrome Badge

தேசிய நல்லிணக்க வாரம் யாழிலும் பிரகடனம்

In
Published: 11:47 GMT, Jan 11, 2017 |
0 Comments
1030
reconciliation-week

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் இன்று (புதன்கிழமை) யாழிலும் பிரகடனப்படுத்தப்பட்டது.

இன மதங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் இந்த செயற்திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

இதன்போது சகல அரச ஊழியர்களும் நல்லிணக்கம் தொடர்பான பிரகடன உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அத்தோடு, இன மற்றும் மதங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்டத்தில் இடம்பெற்ற மற்றும் இடம்பெறவுள்ள செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ப.செந்தில் நந்தனன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)