Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘ஒரே சுற்று ஒரே பாதை’ மாநாட்டில் பங்கேற்குமாறு தெரேசா மேக்கு அழைப்பு

In
Updated: 10:22 GMT, Feb 9, 2017 | Published: 10:21 GMT, Feb 9, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Elakkiya
theresa-may_650x400_41475399699

சீனாவில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள ‘ஒரே சுற்று ஒரே பாதை’ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானிய பிரதமர் தெரேசா மேக்கு சீன அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய மூன்று பிராந்தியங்களையும் உள்ளடக்கி ரயில் பாதைகள், துறைமுகங்கள் மற்றும் மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் ‘ஒரே சுற்று ஒரே பாதை’ திட்டத்தினை சீனா முன்னெடுத்துவருகின்றது.

இதன் முதலாவது மாநாடு எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் தெரேசா மேக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘ஒரே சுற்று ஒரே பாதை’ மாநாட்டின் முழுமையான விபரங்களை சீன அரசு வெளியிடவில்லை. எனினும் இந்த மாநாட்டிற்கான அழைப்பு தெரேசா மேக்கும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாநாட்டில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்வார் என ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg