Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை? ஆளுநர் மாளிகை மறுப்பு

In இந்தியா
Updated: 04:12 GMT, Feb 11, 2017 | Published: 04:11 GMT, Feb 11, 2017 |
0 Comments
1075
icon_com
This post was written by : Risha
Raj-Bhavan-expelled-that-any-notifications-sent-to-centre_SECVPF

சசிகலா குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பி உள்ளதாக வெளியான தகவல்களை ஆளுநர் மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் தற்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைப்பாரா? அல்லது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவை அழைப்பாரா? என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று (வெள்ளிக்கிழமை) மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு 3 பக்க அறிக்கை ஒன்றை அனுப்பியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் குறித்த செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ள ஆளுநர் மாளிகை, ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கோ, குடியரசு தலைவருக்கோ எவ்வித அறிக்கையையும் அனுப்பவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg