Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் முன்னாள் நகரசபை உறுப்பினர்

In இலங்கை
Updated: 07:17 GMT, Feb 11, 2017 | Published: 07:17 GMT, Feb 11, 2017 |
0 Comments
1152
This post was written by : Risha

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தினுள் அனுமதியின்றி பிரவேசிக்க முயற்சித்தவர் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஒருவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிலுருந்து தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தினுள் அனுமதியின்றி உட்பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் இன்று (சனிக்கிழமை) காலை அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டடிருந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் தொழில்வாய்ப்பு ஒன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி இல்லத்திற்கு விஜயம் செய்ததாகவும், அவர் 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை கோட்டை மாநகர சபை உறுப்பினராக சேவையாற்றி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில், ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவிருந்த தினத்திற்கு முன்தினம் கைத்துப்பாக்கியுடன் நடமாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg