Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடியேற்றவாசிகளை சட்டவிரோதமாக பிரான்சுக்கு அழைத்து வந்தவருக்கு 3000 யூரோக்கள் அபராதம்

In ஐரோப்பா
Published: 09:37 GMT, Feb 11, 2017 |
0 Comments
1341
icon_com
This post was written by : Sylviya
13

இத்தாலியில் உள்ள குடியேற்றவாசிகளை சட்டவிரோதமாக பிரான்சுக்கு அழைத்துவரும் பணியில் ஈடுபட்ட விவசாயி ஒருவருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) 3000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Cedric Herrou  என அழைக்கப்படும் குறித்த விவசாயிக்கு பிரான்ஸ் அரசாங்த்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ள போதிலும் பலர் அவரது செய்கைகள் நியாயமானவை எனவே தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் குறித்த விவசாயி மேற்கொண்டது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் அவருக்கு எட்டு மாத சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் மற்றும் வறுமை காரணமாக மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து வரும் குடியேற்றவாசிகளுக்கு இருப்பிடம் அளிப்பது தொடர்பில் பல நாடுகள் அக்கறை கொண்டுள்ள போதிலும் அதிகரித்த குடியேற்றவாசிகளின் வருகை காரணமாக பல நாடுகள் தற்போது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்நிலையில், குறித்த விவசாயி மேற்கொண்ட செயல் சட்டத்திற்கு புறம்பானதாக இருந்தாலும் அது மனிதாபிமானம் மிக்க செயல் என பலர் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg