Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோத்தபய நீதிமன்றில் முன்னிலையானார்

In இலங்கை
Updated: 17:31 GMT, Feb 13, 2017 | Published: 17:23 GMT, Feb 13, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : Vithushagan
unnamed (18)

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) முன்னிலையானார்.அவன்காட் கப்பல் ஆயுத கொள்வனவு தொடர்பான வழக்கு விசாரணையில் தமது தரப்பு வாதத்தை முன்வைக்கவே அவர் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

அந்த குற்றச்சாட்டு சட்டத்திற்கு புறம்பானது என கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை நடத்திச் செல்வதற்கு நிறுவனமொன்றுக்கு அனுமதியளித்தமையால் மத்திய அரசுக்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg