Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாந்தோட்டை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Updated: 17:42 GMT, Feb 13, 2017 | Published: 17:41 GMT, Feb 13, 2017 |
0 Comments
1169
This post was written by : Vithushagan

கடந்த மாதம் அம்பாந்தோட்டை நகரில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டிருந்த 25 பேரில் 24 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனுடைய தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த 24 சந்தேகநபர்களுக்கும் இந்த மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்றைய தினம் அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் நீதிபதி மஞ்சுல கருணாரத்ன சந்தேகநபர்கள் 24 பேரினதும் விளக்கமறியலை நீடித்ததுடன்,ஒருவரை பிணையில் விடுவிப்பதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை பகுதியில் முதலீட்டு வலயமாக்குவதற்கு நிலங்கள் ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கலகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg