Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் பழனிச்சாமி

In இந்தியா
Updated: 10:20 GMT, Feb 14, 2017 | Published: 10:20 GMT, Feb 14, 2017 |
0 Comments
1215
icon_com
This post was written by : Risha
edapadi_1660253f

அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ்-ஐ சந்திக்கவுள்ளதாக ஆளுநர் மாளிகையிலிருந்து உத்தியோப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சந்திப்பின் போது அமைச்சர் பழனிச்சாமியுடன் 12 பேர் உடன் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.-வின் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதன்படி தற்போது பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கி, சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தான் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து தனது ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே கையளித்திருந்த நிலையில், அதனை ஆளுநரும் ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே அந்த ராஜினாமாவை திரும்பப்பெற வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg