Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்றவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்: பிரதமர் உறுதி

In இலங்கை
Published: 05:51 GMT, Feb 15, 2017 |
0 Comments
1274
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்கு சென்று, அங்கு தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவார்களாயின் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில், கன்பராவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் தொடர்ந்து கூறுகையில்-

”இலங்கையர்கள் பலர் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியா சென்றுள்ள நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் பப்புவா நியுகினி மற்றும் நவுறு தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் தாயகம் திரும்புவார்களாயின் அவர்களை இலங்கை அரசாங்கம் வரவேற்கும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது. மாறாக, அரசாங்கம் அவர்களுக்கு உதவிகளை வழங்கும்.

தற்போது இலங்கையில் அமைதி மற்றும் சமாதானத்துடன் கூடிய பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவிற்கு தமிழ் மக்கள் மட்டுமன்றி ஏனைய இனத்தவர்களும் சட்டவிரோதமாக சென்றுள்ளனர். யுத்தம் நடைபெறாத பகுதிகளிலிருந்தும் பலர் சென்றுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்குச் சென்றுள்ள தமிழ் மக்கள் மீண்டும் தாயகம் திரும்புவதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விரும்புகின்றது” என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg