Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஸ்வினிடம் ஆலோசனை பெற்ற ஹசன் மிராஸ்!

In கிாிக்கட்
Updated: 09:29 GMT, Feb 15, 2017 | Published: 09:28 GMT, Feb 15, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Anojkiyan
hasan

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது, பங்களாதேஷ் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மெஹதி ஹசன் மிராஸ், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினிடம் ஆலோசனை பெற்றுள்ளார்.

இது குறித்து இந்தியக் கிரிக்கெட் சபை, (பிசிசிஐ) தனது உத்தியோகபூர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ”மெஹதியுடன் அஸ்வின் தனது பந்து வீச்சு குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். அவருக்கு சிறந்த வகையில் எப்படி பந்து வீச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

19 வயதே ஆன மெஹதி ஹசன் மிராஸ், இந்திய அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட்போட்டியில் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஓக்டோபர் மாதம் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமான மெஹதி ஹசன் மிராஸ், முதல் போட்டியில் 7 விக்கெட்டுக்களும், 2வது போட்டியில் 12 விக்கெட்டுக்களும் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்று சாதனை படைத்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg