Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க இராஜாங்க செயலாளர் முதல் அரசமுறை பயணமாக ஜேர்மனி விஜயம்

In
Updated: 08:00 GMT, Feb 16, 2017 | Published: 08:00 GMT, Feb 16, 2017 |
0 Comments
1228
icon_com
This post was written by : Elakkiya
_94663727_rex

அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளராக பதவியேற்றுள்ள ரெக்ஸ் ரில்லர்ஸன் தனது முதலாவது அரசமுறை பயணமாக ஜேர்மனி சென்றுள்ளார்.

ஜேர்மனியின் பொன் நகரில் இன்றும் நாளையும் என இருதினங்களுக்கு நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் முகமாக நேற்று (புதன்கிழமை) ரெக்ஸ் ரில்லர்ஸன் ஜேர்மனி சென்றிருந்தார்.

இந்நிலையில் ஜி-20 வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்திக்கும் அவர் ‘அமெரிக்காவே முதல்’ என்ற ட்ரம்பின் கருத்து மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவையும் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.மேலும், ஜி-20 மாநாட்டில் பேசப்படும் விடயங்களை உன்னிப்பாக அவதானிப்பதும் ரெல்லர்ஸனின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜி-20 மாநாட்டில், வட கொரியாவின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகள், ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளதாக கூறப்படும் புதிய ஏவுகணை விவகாரம் மற்றும் சிரியா, யேமன், உக்ரைன் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg