Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனது பிறந்த தினத்தில் ரசிகர்களுக்கு பரிசு வழங்கவுள்ள சிவா

In சினிமா
Updated: 11:52 GMT, Feb 16, 2017 | Published: 11:52 GMT, Feb 16, 2017 |
0 Comments
1187
This post was written by : Risha

சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் தலைப்பை அவரது பிறந்த தினமான நாளைய தினம் வெளியிடப் போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ள நிலையில், அவருடைய ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வழங்கும் சிறப்பு பரிசாக இது அமையவுள்ளது.

24யுஆ ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகிவரும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் அனிருத்.

இப்படத்தில், பஹத் பாசில், சினேகா, ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சதிஷ், ரொபோ சங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி வெளியிடப்படும் என ஏற்கனவே படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg