Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூகங்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி யாழில் முப்படையினர் நடைபவனி

In இலங்கை
Updated: 08:53 GMT, Feb 18, 2017 | Published: 08:53 GMT, Feb 18, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Risha
tri

அனைத்து சமூகங்களுக்கும் இடையே சமாதானம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு நடைபவனி, முப்படையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இலங்கையின் 69ஆவது சுதந்திர தின அடையாளமாக இடம்பெற்ற இந்த நடைபவனியை இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளின் கட்டுப்பாட்டு பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

யாழ் ஒல்லாந்தர் கோட்டையில் இருந்து குறித்த பேரணியை யாழ். மாவட்ட முப்படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க ஆரம்பித்து வைத்தார்.

இப்பேரணி யாழ். பண்ணை வீதியூடாக காங்கேசன்துறை வீதி, ஸ்ரான்லி வீதி ஆகிய நகர வீதிகளு}டாக பயணித்து மீண்டும் யாழ்.ஒல்லாந்தர் கோட்டைக்கு சென்று நிறைவடைந்தது.

நாட்டிலுள்ள சகல இனத்தவரும் நிரந்தர சமாதானம் மற்றும் ஒற்றுமையை பெற வலியுறுத்தி இப்பேரணியில் முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர்.

tri2 tri1

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg