Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் காலமானார்

In இந்தியா
Published: 08:14 GMT, Feb 19, 2017 |
0 Comments
1103
icon_com
This post was written by : Shailu
Altamas Kabir

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

2012 செப்டம்பர் முதல் 2013 ஜூலை வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த இவர், சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தாவில் அவர் காலமானார்.

அல்டமாஸ் கபிரின் திடீர் மறைவுக்கு நீதித்துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் நேரிலும், சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

19-7-1948 அன்று மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவில் பிறந்த அல்டமாஸ் கபிர், சட்டப்படிப்புக்கு பின்னர் 1973ஆம் ஆண்டு வழக்கறிஞரானார்.

கொல்கத்தாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பிரபல சிவில் மற்றும் குற்றவியல் வழக்கறிஞரான இவர், 1990ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய இவர், பல வழக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை அளித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற அவர், 2012ஆம் ஆண்டு அன்று நாட்டின் தலைமை நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று கொண்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg