Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவூதி, ருவாண்டா மற்றும் குரேஷிய தலைவர்கள் மியூனிக் விஜயம்

In உலகம்
Published: 08:36 GMT, Feb 20, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Sylviya

ஜேர்மனியின் மியூனிக் நகரில் நடத்தப்பட்டு வரும் பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் அடெல் – அல் – ஜூபைர் (Adel al-Jubeir), ருவாண்டா ஜனாதிபதி போல் ககாமே (Paul Kagame), மற்றும் குரேஷிய ஜனாதிபதி கொலின்டா கிரபார் (Kolinda Grabar) ஆகியோர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு உச்சிமாநாட்டின் இறுதி நாள் பேச்சுவார்த்தையிலேயே மேற்குறித்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த பாதுகாப்பு உச்சிமாநாட்டின் போது கருத்து தெரிவித்த சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் அடெல், சிரிய ஜனாதிபதி பஷர் – அல் – அஸாட் மற்றும் யேமனில் உள்ள ஹெளதி பிரிவினைவாதிகளுக்கு ஈரான் உதவி புரிந்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மூன்று நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட குறித்த பாதுகாப்பு உச்சிமாநாட்டில் முன்னணி அரசியல்வாதிகள், நேட்டோ அமைப்பின் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா ஆகிய அமைப்புக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg