Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெய்லர் சதம்: தென்னாபிரிக்காவுக்கு நியூசிலாந்து பதிலடி!

In கிாிக்கட்
Published: 07:05 GMT, Feb 22, 2017 |
0 Comments
1335
icon_com
This post was written by : Anojkiyan
tay

நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையில், இன்று (புதன்கிழமை) கிறிஸ்ட் சர்ச்சில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி, 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக, ரோஸ் டெய்லர் 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ப்ரீடோர்யுஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைதொடர்ந்து, 290 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியால், 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்கள் மாத்திரமே பெற முடிந்தது. இதனால் 6 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்க அணி, தோல்வியை தழுவியது.

இதில், அணியின் அதிகபட்ச ஓட்டமாக குயின்டன் டி கொக் 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் போல்ட் 3 விக்கெட்டுகளையும், சான்டனர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரோஸ் டெய்லர் தெரிவுசெய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் கடந்த முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு நியூசிலாந்து அணி பதிலடி கொடுத்துள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg