Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் டெய்லர் சதம் அடித்து சாதனை!

In கிாிக்கட்
Updated: 10:35 GMT, Feb 22, 2017 | Published: 10:31 GMT, Feb 22, 2017 |
0 Comments
1599
icon_com
This post was written by : Anojkiyan
tayl

கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், சதம் அடித்த நியூசிலாந்து அணியின் அனுபவ வீரரான ரோஸ் டெய்லர் புதிய சாதனை படைத்துள்ளார்.

டெய்லர் இப்போட்டியில், 110 பந்துகளில் 8 பவுண்ரிகள் அடங்களாக 102 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டு ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். 180வது ஒருநாள் போட்டியில் விளையாடிய டெய்லருக்கு இது 17வது சதமாகும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதம் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு அந்நாட்டு வீரர் ஆஸ்லே 16 சதம் அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது.

மேலும், டெய்லர் 6 ஆயிரம் ஓட்டங்களையும் கடந்தார். அவர் 180 போட்டியில் 6052 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 43.85 ஆகும். அதிகபட்சமாக 131 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

6 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த 4வது நியூசிலாந்து வீரர் டெய்லர் ஆவார். பிளமிங் 8007 ஓட்டமுடன் (279 போட்டி) முதல் இடத்திலும், ஆஸ்லே 7090 ஓட்டமுடன்; 2வது இடத்திலும், மெக்கல்லம் 6083 ஓட்டமுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg