Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் ‘கொடி’ பட இயக்குனரோடு இணையும் தனுஷ்

In சினிமா
Updated: 10:21 GMT, Feb 22, 2017 | Published: 10:21 GMT, Feb 22, 2017 |
0 Comments
1091
This post was written by : Shailu
kodi

தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கொடி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

இதனை தொடர்ந்து தனுஷ் மீண்டும் ‘கொடி’ படத்தை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக துரைசெந்தில்குமார் இயக்கத்தில் வெளியான ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ ஆகிய இருபடங்களையும் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் தலைப்பில் தயாரித்திருந்தார்.  தனுஷின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு தனுஷிற்கு நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘வடசென்னை’, ‘வேலையில்லா பட்டதாரி 2′, ‘மாரி 2′ உள்ளிட்ட படங்களும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படமும், ஒரு ஹொலிவுட் படமும் ரிலீசாக உள்ளன.

மேலும் தனுஷ் இயக்கி வரும் ‘பவர்பாண்டி’ படம் ஏப்ரல் 14-ஆம் திகதி தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிற நிலையில், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg