Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் வெற்றிப்பாதைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? அவுஸ்ரேலியா

In கிாிக்கட்
Published: 10:57 GMT, Feb 22, 2017 |
0 Comments
1218
This post was written by : Anojkiyan
cricket-australia-v-india-preview_b3lbqjds6ibp1atjqfwnj9ewf

இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, நாளை (வியாழக்கிழமை) புனேயில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளிலும் சம பல முடைய வீரர்கள் இருப்பதால், இப்போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்ந்து 6 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, 7வது டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்திய அணி கடைசியாக 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இலங்கையின் காலி மைதானத்தில் நடந்த டெஸ்டில் இலங்கையிடம் 63 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. அதன்பிறகு விளையாடிய 19 டெஸ்டில் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை. இதில் 15 டெஸ்டில் வெற்றி பெற்றது. 4 டெஸ்ட் சம நிலை ஆனது.

தோல்வியை சந்திக்காமல் விளையாடி வரும் இந்திய அணியின் சாதனை அவுஸ்ரேலிய தொடரிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை அவுஸ்ரேலிய அணியை பொருத்த வரையில், சொந்த மண்ணில் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய கையோடு இந்தியாவை எதிர்கொள்கிறது. ஆனால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது என்பது சவாலானதே.

அத்தோடு அவுஸ்ரேலிய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது 4 டெஸ்டிலும் தோற்று ‘வயிட்வாஷ்’ ஆனது. அதற்கு இந்த முறையாவது பதிலடி கொடுத்துவிட வேண்டுமென்ற ஆர்வத்தில் உள்ளது.

வோர்னருடன், கவாஜா அல்லது ரென்ஷா தொடக்க வீரராக களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும், அதிரடி துடுப்பாட்ட வீரரான மேக்ஸ்வெல் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என கூறப்படுகின்றது. இருப்பினும் பொருத்திருந்த பார்ப்போம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg