Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல் தொடரில் அசேல குணரட்ன விளையாடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் இவர்தானாம்!

In கிாிக்கட்
Published: 11:21 GMT, Feb 22, 2017 |
0 Comments
2973
icon_com
This post was written by : Anojkiyan
Australia v Sri Lanka - 2nd T20

கிரிக்கெட் அரங்குக்குள் களம் புகுந்த சொற்ப நாட்களிலேயே புகழ் பெற்ற இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் அசேல குணரட்ன, இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளின் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலாசகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, குணரட்னவின் பெயரினை பரிந்துரை செய்ததையடுத்தே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ரி-ருவென்ரி போட்டியில், அதிரடியாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணிக்கு தொடரை வென்றுக்கொடுத்த சகலதுறை வீரரான அசேல குணரட்னவை, மும்பை இந்தியன்ஸ் அணி 30 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg