Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்துவேன்: எடப்பாடி

In இந்தியா
Published: 11:12 GMT, Feb 24, 2017 |
0 Comments
1237
icon_com
This post was written by : Surenth

விவசாயிகள் தொடர்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவர நினைத்த திட்டங்கள் யாவும் செயல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.

கோவை ஈஷா மையத்தில் அமைந்துள்ள சிவன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற முதலமைச்சர், கோவை விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “எதிர்வரும் 5 நாட்களுக்குள் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் வழங்கப்படும். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும்.

அதேவேளை, 300 கோடி செலவில் கோவை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும். கோவையில் மோனோ ரயில் திட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். 120 கோடியில் வெள்ளக்கோவில் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கொண்டு வர நினைத்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.

அத்துடன் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று ஒரு சிலர் தேவையில்லாமல் கூறுகின்றனர்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg