Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி பழிதீர்த்துக் கொண்டது அவுஸ்ரேலியா

In கிாிக்கட்
Published: 09:57 GMT, Feb 25, 2017 |
0 Comments
2391
icon_com
This post was written by : Elakkiya

இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்களால் அவுஸ்ரேலியா அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றிமூலம் கடந்த சில ஆண்டுகளாக ஆசியாவில் தொடர்ச்சியாக பல தோல்விகளை சந்தித்த அவுஸ்ரேலிய அணி தனது சோகத்திற்கு முடிவுகட்டியுள்ளது. அதுமட்டுமின்றி உள்ளூரில் அசைக்க முடியாத அணியாக கம்பீர நடை போடும் இந்திய அணியை பழிதீர்த்துக் கொண்டது என்றும் கூறலாம்.

புனேயில் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பித்து நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா தனது முதலாவது இன்னிங்ஸில் 94.5 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 260 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய அணியின் சார்பில் ரென்ஷா 68 ஓட்டங்களையும் ஸ்டார்க் 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் உமேஸ் யாதவ் 4 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 40.1 ஓவர் நிறைவில் 105 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்களையும் இலகுவாக இழந்தது.

‘ஓட்டங்களை குவிக்கும் இயந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ஓட்டங்களை குவிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் லோகேஷ் ராகுல் மாத்திரமே அதிகபட்சமாக 64 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இவ்வாறு முதல் இன்னிங்ஸ் நிறைவில் 155 ஓட்டங்களால் முன்னிலைபெற்றிருந்த அவுஸ்ரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 285 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்மித் 109 ஓட்டங்களை பெற்று அணிக்கு கைகொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தமது பந்து வீச்சு திறனை வெளிப்படுத்த தவறவில்லை. அவுஸ்ரேலிய அணியின் முதலாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை கைப்பற்றிய அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை கைப்பற்றினார். அதேபோன்று ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

இறுதியாக இந்திய அணிக்கு 441 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இவ்வாறு அதிகூடிய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 33.5 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஓ கீஃவ் இந்திய அணியின் இரண்டு இன்னிங்ஸிலும் தலா 6 விக்கெட்களையும் லியொன் 4 விக்கெட்களையும கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணிக்கு சவாலாக திகழ்ந்த அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஓ கீஃவ் தெரிவானார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg