Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை நாங்கள் செய்வோம்: பிரதமர் மோடி

In இந்தியா
Published: 07:55 GMT, Feb 26, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Shailu

மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை நாங்கள் செய்வோம் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் அடுத்த மாதம் 4ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொண்டார். இதில் உரையாற்றிய அவர் கூறுகையில்,

‘ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் வடகிழக்கு பிராந்தியம் முன்னேற வேண்டும். எனவே இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய அரசு, கிழக்கு சார்ந்த கொள்கையை செயல்படுத்தி உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக வேலைவாய்ப்புகள், உள்கட்டமைப்பு, சரியான குடிநீர் வசதிகளை ஏற்படுத்த தவறிய காங்கிரஸிற்கு, மணிப்பூரை ஒருநாள் ஆள்வதற்கு கூட உரிமை இல்லை.

எனவே 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய பா.ஜனதாவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை நாங்கள் செய்வோம். அவர்கள் 15 ஆண்டுகளில் செய்ய முடியாததை வெறும் 15 மாதங்களில் செய்து முடிப்போம்.

மணிப்பூரில் மக்களுக்கு உணவு, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். ஆனால் இந்த தடைகளை போக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே மணிப்பூரில் அடுத்த அரசை பா.ஜனதா அமைப்பது உறுதி. அப்படி ஆட்சிக்கு வந்தால் எந்த விதமான பொருளாதார முடக்கத்தையும் இங்கு அனுமதிக்கமாட்டோம்.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg