Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானிய இயக்குனரின் தாக்குதலுக்கு இலக்கானார் டொனால்ட் ட்ரம்ப்

In உலகம்
Updated: 12:13 GMT, Feb 27, 2017 | Published: 12:04 GMT, Feb 27, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : elayathambi
4070

ஒஸ்கார் விருது பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனர் அஸ்ஹர் ஃபர்காடி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் மனிதாபிமானமற்ற பிரயாணத் தடையை வன்மையாக கண்டித்துள்ளார். அஸ்ஹர் ஃபர்காடியின் The Salesman (Le Client) என்ற திரைப்படம் சிறந்த ஆங்கிலமல்லாத  மொழித் திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதைப் பெற்றிருந்தது.

அமெரிக்காவில் இடம்பெற்ற ஒஸ்கார் விழாவில் அஸ்ஹர் ஃபர்காடி பங்கேற்கவில்லை. அவரின் பிரதிநிதிகளாக இரண்டு ஈரானிய – அமெரிக்கர்கள் பங்கேற்றிருந்தனர்.

விருதை ஏற்கும் அஸ்ஹர் ஃபர்காடியின் அறிக்கையில் அமெரிக்காவும் எதிரிகளும் என உலகை பிரிக்கும் ட்ரம்பின் நடவடிக்கை அச்சமூட்டும் உலகை உருவாக்குவதாக   அவர் தெரிவித்திருந்தார்.

அவரது பிரதிநிதிகள் அஸ்ஹர் ஃபர்காடியின் அறிக்கையை வாசித்தனர்.  நான் விழாவிற்கு வராமல் இருப்பது எனது ஈரானிய மக்களினதும் தடை செய்யப்பட்ட ஏனைய ஆறு இஸ்லாமிய நாட்டவர்களினதும்  சுய கௌரவத்தைக் காப்பதற்காகும். என அஸ்ஹர் ஃபர்காடியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg