Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கில் மேலும் 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்: யாழ்.கட்டளைத் தளபதி

In இலங்கை
Updated: 04:20 GMT, Mar 28, 2017 | Published: 03:53 GMT, Mar 28, 2017 |
0 Comments
1308
icon_com
This post was written by : Ravivarman
jjf

வடக்கில் மேலும் 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயகத்தில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்-

“யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் 20,000 ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 2000 ஏக்கர் காணிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

அந்தவகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் யாழ்.மாவட்டத்தின் காங்கேசன் துறைமுகப் பகுதியின் சில இடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதுகாப்பு படையினர் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் காணிகளை வழங்கி, நம்பகரமான செயற்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, இராணுவ தலைமைப்பீட உயர் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று செல்வதுடன், கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, வடக்கு மாகாணத்திற்கான   கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg